பக்கம் எண் :

1218திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3939. தண்டொடு சூலந் தழையவேந்தித்
       தையலொருபாகம்
கண்டிடு பெய்பலி பேணிநாணார்
     கரியி னுரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட
     வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற
     தொடர்பைத் தொடர்வோமே.           6

3940. கல்லிய லும்மலை யங்கைநீங்க
       வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற
     சுடரா னிடர்நீங்க
மல்லிய லுந்திர டோளெம்மாதி
     வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி
     யிருப்பவர் புண்ணியரே.               7


     6. பொ-ரை: சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக
ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். இடப்
படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர். யானையின்
தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத
்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான் திருத்
தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து, நாமும்
அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக!

     கு-ரை: தழைய - ஒளிமிக. ஒருபாகம் கண்டு - ஒருபால் குடிகொண்டு.
இடுதல் - போடுதல். பெய்தல் - வார்த்தல்; எனவே இட்டும், வார்த்தும் ஈயும்
பிச்சை என்பது இடுபெய்பலி என்பதன் பொருளாகக் கொள்க. தொண்டு -
தொண்டர். தொடர்பைத் தொடர்வோம் - பின்பற்றுவோம்.

     7. பொ-ரை: சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேரு
மலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற