பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)107. திருநாரையூர்1225

3948. வெண்ணில வஞ்சடை சேரவைத்து
       விளங்குந் தலையேந்திப்
பெண்ணி லமர்ந்தொரு கூறதாய
     பெருமா னருளார்ந்த
அண்ணன் மன்னியுறை கோயிலாகு
     மணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள்
     நடலை கரிசறுமே.                    4


தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள்
நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும்.

     கு-ரை: தோடு ஒருகாது ஒருகாது சேர்ந்த குழையான் - இடக்காதில்
தோடும், வலக்காதில் குழையும் அணிந்தவன். பீடு ஒருகால் பிரியாது நின்ற
- ஒருகாலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நின்ற, பிறையான்.
பழிபோகும் வண்ணம் பயிலும் - பழி முதலிய தீமைகள் நீங்குமாறு
இடைவிடாது போற்றுங்கள்.

     4. பொ-ரை: வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து,
விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில்
ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்து தலைவனுமாகிய
சிவபெருமான் நிலையாக வீற்றிருந்தருளும் கோயிலுள்ள அழகிய திரு
நாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு
செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும்.

     கு-ரை: நிலவம் - நிலவு, அம்சாரியை. சேர - பொருந்த. திரு
நாரையூர் தன்னை, நண்ணல் அமர்ந்து - விரும்பி அடைந்து. (அமர்தல் -
விரும்பல்) உறவு ஆக்குமின்கள் - அன்பைச் செலுத்துங்கள். உறவு - அன்பு
“உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்