பக்கம் எண் :

1228திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர்
     நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும்
     வகையின் விளைவாமே.                7

3952. கூசமிலா தரக்கன் வரையைக்
       குலுங்க வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த
     விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற
     பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற
     திருநாரை யூர்தானே.                  8


நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும்
ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திரநாரையூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் அருள்
விளையாடல்களின் விளைவுகளேயாகும்.

     கு-ரை: ஊழியும் - பெருங்கால எல்லையாகிய பிரளய காலமும். காலம்
- கார் முதலிய பருவகாலமும். ஏழு இசையின் பொருளாகி - ஏழிசையின்
பயனாகியும் . வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி - உலக
வாழ்க்கையில் நிகழும் வினைகளின் சேர்க்கையாகி. நாழிகையும் - சிறு கால
எல்லையாகிய நாழிகையும். பல ஞாயிறு ஆகி - பல தினங்களும் ஆகி.
(இவைகளெல்லாம்). நளிர் - குளிர்ச்சி பொருந்திய. மைந்தர் செய்யும் -
சிவபெருமான் செய்யும். வகையின் விளைவாம் - திருவிளையாடல்களின்
வகைகளினால் விளைந்த விளைவேயாகும். இங்கே ஞாயிறு நாள்
என்னப்பட்டது இலக்கணை.

     8. பொ-ரை: கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க
எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத
விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்சமில்லாத
உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும், இடைவிடாது
தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய
திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.