பக்கம் எண் :

1236திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3964. நீல மேனி யமணர் திறத்துநின்
  சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        9

3965. அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
  துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        10


     கு-ரை: திருநீறு பூசியவர்மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும்
நில்லாத சமணர் என்பது முன் இரண்டடியின் கருத்து. தேற்றி - அவர்கள்
பிழையைத் தெளிவித்து. அரக்கர்க்கும் - இழிவு சிறப்பும்மை. ஆற்ற -
மிகவும். அருளினாய் - அருள் புரிந்தவனே என்ற குறிப்பு தீமை
செய்தவர்களுக்கும் பேரருள் புரியும் பெருங்கருணைக் கடல். ஆகையினால்
தீயவர்களாகிய அமணர் திறத்தும் அக்கருணை காட்டின் சைவம் குன்றுமே
என்னும் கருத்து.

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் காணுதற்கரியவராய், அழகிய
திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவபெருமானே! கரிய
உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும்
வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில்
வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும்உம் புகழே மிக
வேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: நீலமேனி அமணர் - மேல் 2 ஆம் பாட்டில் காரமண்
என்பதற்கு உரைத்தது உரைக்க. நீலம், பச்சை, கருமை இவற்றுள் ஒன்றை
மற்றொன்றாகக் கூறுவது மரபு. திறத்து - எதிரில். நின் சீலம் - உமது
சமயக் கொள்கையை. குன்றம் - நெருப்பு மலை (அண்ணாமலை) யாய்
நின்றமையைக் குறிக்கிறது.

     10. பொ-ரை: சினந்து பேசும் இயல்புடைய சமண, புத்தர்களால்
காணஇயலாத தலைவரே! முன்னொரு காலத்தில் முப்புரங்களை