பக்கம் எண் :

1296திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

ஆனவானவர் வாயினு ளத்தனே
     யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே
     வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.      11

 திருச்சிற்றம்பலம்


பொருள்களை அடக்கிய, முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான
சம்பந்தர், திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப்
போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு
எல்லா நன்மைகளும் உண்டாகும்.

     கு-ரை: ஈனஞானிகள் தம்மொடு விரகனே - அறிவிலிகளுடன் சேராத
சூழ்ச்சியை உடையவன். விரகு - சூழ்ச்சி. ஏறுபல்பொருள் - பல
பொருள்களை அடக்கிய. முத்தமிழ்விரகன். சம்பந்தன் - உரிமையுடையவன்.
ஆன - பொருந்திய. வானவர், வாயினுள் - வாயினுள் துதிக்கப்படுகின்ற.
அத்தன் - சர்வலோகநாயகன். அன்பரானவர் - அடியார்களுக்கு. வாய் -
வாய்த்த. இன் - இனிய. உளத்தன் - உள்ளத்தில் இருப்பவன்.

திருஞானசம்பந்தர் புராணம்

நீடுசீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும்
மாடுசென் றிறைஞ்சி நோக்கி மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பி னாலே
நாடிஅங் கிருந்து தங்கள் நாதரைப் பாட லுற்றார்.

திருவிய மகத்தின் உள்ளுந்
     திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி
     அவரொடும் அளவளாவித்த
தெருளுடைத் தொண்டர் சூழத்
     திருத்தொண்டின் உண்மைநோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார்
     இனிதமர்ந்திருந்தா ரன்றே.

                               -சேக்கிழார்.