பக்கம் எண் :

1330திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

தளையவிழ் கமலத் தவிசின்மே லன்னந்
     தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவிற் றிருக்கு
     மிழலையா னெனவினை கெடுமே.        9

4088. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
       கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய வெழுந்தநஞ் சதனை
     யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
     குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        10


முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய
முதல்வரான சிவபெருமான். முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச்
சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க,
நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய
திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத
வினை தீரும்.

     கு-ரை: கெண்டி - இடந்து. தாமரைப்பூ சிம்மாசனமாகவும் அதன்
மேல் பெடையோடிருந்த அன்னம் அரசியோடு வீற்றிருக்கும் அரசனாகவும்,
கழனிகளில் விளைந்த நெற்கதிர்கள் வெண்சாமரையாகவும் உருவகித்தமை
அறிந்து மகிழத்தக்கது.

     10. பொ-ரை: கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும்,
ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள், உரைக்கும் மொழிகளை ஏற்க
வேண்டா. தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு
அமுதம் அருளியவர் சிவபெருமான். உயர்ந்த கமுகின் பழக்குலை விழ,
அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும். மிக உயர்ந்த தென்னை
மரங்களின் உச்சியில் மேகம் படியும். இத்தகைய வளம் பொருந்திய
சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும்
நீங்கும்.

     கு-ரை: மிகஉயர்ந்த வாழைமரத்தின் கனிகள், மதிலின்மேல்