பக்கம் எண் :

1356திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4124. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
       பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
     விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ்
     செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடச் சேர்க்குங் கோணமா
     மலையமர்ந் தாரே.                   4


கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த
ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த
திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்

     கு-ரை: பனித்திளந்திங்கள் - குளிர்ந்த இளம்பிறை. பனித்த -
பெயர்ச்சொல் அடியாகப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். “பனித்த சடையும்”
எனஅப்பர் வாக்கிலும் பயில்கிறது. பனித்த + இளம் = பனித்திளம்.
பெயரெச்ச விகுதி கெட்டது.

     4. பொ-ரை: இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின்
வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய மன்மதன்
சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின் அவன் தேவி வேண்ட
அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர்.
இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். தாமரை போன்ற திருவடிகளை
உடையவர். ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி
இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை
என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: உலகத்தை அழிப்பது போலும் பெருக்கெடுத்துவந்த
கங்கையை ஒரு சிறு திவலையாக்கி ஒரு சடையின் ஓர் உரோமத்தின்
நுனியில் வைத்தது அதைப் பழிப்பதுபோல இருந்தது (பழித்து) என்பதனால்
பெறப்படுகிறது. தெழித்து - உரப்பி (மிக்க ஒலியைச் செய்து).