பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)123. திருக்கோணமலை1359

4125. தாயினு நல்ல தலைவரென் றடியார்
       தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
     மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
     நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
     கோணமா மலையமர்ந் தாரே.           5

4126. பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி
       தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ்
     செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை
     வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ்
     கோணமா மலையமர்ந் தாரே.           6


     5. பொ-ரை: தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின்
வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை
உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்கள்பால் நோய், பிணி
முதலியன தாக்காவண்ணம் காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர்.
இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை.
இன்றும் இதனை நேரில் காணலாம்.

     6. பொ-ரை: பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும்
மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை வழிபாடு
வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு
முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு அருள்புரிந்த செம்மையான
திறமுடையவர் சிவபெருமான். ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர்.
அப்பெருமான் விரிந்துயர்ந்த