2805. |
தொல்லை
யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் |
|
தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம்
சேர்த லால்கழற் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. 5 |
வேட்கையும் விளங்கும்.
கொம்பு
- பூங்கொம்மை. அலைத்து (நமக்கு இத்தகைய அழகே
இல்லையென வருந்த) வருத்தி, அழகு எய்திய - அழகைப்பெற்ற. நுண்இடை
- சிறியஇடை, கோலம் - அழகிய, வாள், ஒளி பொருந்திய முகத்து -
முகத்தில், அம்பு அலைத்த - அம்புகளை, (அவ்வாறே) வருத்திய. இரண்டு
கண்ணாள் - இரு விழிகளையுடைய உமாதேவியாரின், வார்சடை - நெடிய
சடாபாரம், கம்பலைத்து - முக்காரம் செய்து, காமுறு - (கண்டார்) விரும்பும்,
காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர் மக்கள்,
காதலால் - அன்போடு, கழல் சேவடி கை தொழ - கழலையணிந்த சிவந்த
திருவடிகளைத் தொழ. அடையாவினை - துன்பங்கள் அடையமாட்டா.
இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை
உவமம். ஏறுபோற் பீடு நடை என்றார் வள்ளுவரும். (திருக்குறள் 59)
தில்லைவாழந்தணர்களின், துதித்தல், பாடுதல், புகழ் பாராட்டுதல் ஆகிய
செயல்களின் ஓசைக்கு, முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும்.
ஏற்றின் ஒலி முக்காரம் எனப்படும். கம்பலைத்து - கம்பலை யென்னும்
பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கம்பலை - ஓசை. கம்பலை சும்மை,
கலியே, அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள (தொல், சொல்,
உரி. 53) காதலான்: ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது. தூங்குகையான்
ஓங்குநடைய என்புழிப்போல. (புறம்.22.)
5.
பொ-ரை: திரிபுரத்தை எரித்தொழிக்க மலையில்லால் தீக்கணையை
எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப்
பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீலமணிபோலக் கறுத்த
திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில்
பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே! தில்லை வாழந்தணர்
வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த
சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும்.
|