|
முறைமுறை
யாலிசை பாடுவா ராடிமுன் றொண்டர்கள் 5 |
|
இறையுறை
வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே. |
2894. |
வசையறு
மாதவங் கண்டு வரிசிலை வேடனாய் |
|
விசையனுக்
கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே. 6 |
2895. |
சேடர்விண்
ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர் |
|
வீடர்முத்
தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே. 7 |
கேற்ப ஆட முற்பட
அவர்கள் இதயத் தாமரையில் வீற்றிருப்பார்.
அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும் நினையாது.
கு-ரை:பிச்சையை
விரும்பி வெறியுறுநாள். பலியேற்றுத்திரி முறை
திருவீழிமிழலையார். (அவருக்கு) முறை முறையாலிசை பாடுவார் ஆடி-
முறையால் இசைபாடுவாராய் முறையாகவே ஆடி. முன்-முற்பட. இறை-
தங்கும் இடம். உறை-உறைதல்-தங்குதல், முதல் நிலைத் தொழிற் பெயர்.
6. பொ-ரை:திருவீழிமிழலையில் வீற்றிருக்கும்
இறைவர் அருச்சுனன்
செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி, அழகிய வில்லேந்திய
வேட்டுவ வடிவில் வந்து அவனுக்கு அருள்புரிந்தவர். தம்மை இசைத்தமிழால்
பாடி, தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப் பிறரைக் கேட்கும்படி செய்து,
முரசொலிக்கத் திசைநோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில்
வீற்றிருப்பர்.
கு-ரை:இசை
வரவிட்டு-இசை பொருந்தும்படியாகப் பாடி, இயல்
கேட்பித்து-இயற்றமிழ்ப் பொருள்களை விண்ணப்பித்து. திசை நோக்கித்
தொழுது ஆடிப்பாடுவார் ஆகிய அடியாரது சித்தத்தின் கண் சேர்வர்.
கல்லவடம்-ஒருவகைப் பறை. முரசு, பேரி.
7. பொ-ரை:
திருவீமிழலையில் வீற்றிருக்கும் இறைவர்
விண்ணோர்கட்குத் தூரமானவர். மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள்
ஆறினையும் கற்று வல்லவர்களாய், மூவகை அழலை ஓம்பி,
|