பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்47

                           உ

              மூன்றாம் திருமுறையின் உரைத்திறம்


                      செந்தமிழ்க் கலாநிதி

          பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர்

                பிரெஞ்சு இந்தியக் கலைநிறுவனம்,

                           புதுச்சேரி.


     தேவாரத்தின் முதல் திருமுறைக்குக் குறிப்புரை வரைந்த மகா
வித்துவான் ச. தண்டபாணிதேசிகர் அவர்கள் ஆழ்வார்களின் அருளிச்
செயல்களுக்கு வைணவச் சான்றோர் வரைந்த உரைநயங்களில்
ஆழங்காற்பட்டு, அவர்கள் வரைந்த உரை போலவே தாமும் சற்றுச்
சுருக்கமான முறையில் உரை வரைய முற்பட்டுப் பலசொற்றொடர்களுக்கு
நயமான உரைவரைந்து முதல் திருமுறையின் குறிப்புரையை நிறைவு
செய்துள்ளார்.

     அடுத்து, இரண்டாம் திருமுறைக்குக் குறிப்புரை வரைய முற்பட்டு
சித்தாந்த ரத்நாகரம். முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள்
ஆட்டாண்டு பொருள் விளக்கங்களை மேற்கோள்களோடு தந்து
சொல்லமைப்புப்பற்றிய ஆராய்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளார்.

     இம் மூன்றாம் திருமுறைக்கு உரைவரைந்த பண்டித. அ.
கந்தசாமிப்பிள்ளை யவர்கள் தமக்குமுன் உரை வரைந்த சான்றோர்கள்
பின்பற்றிய நெறிமுறைகளை ஏற்றபெற்றி பின்பற்றித் தமக்கே உரிய
நெறிமுறைகளையும் உளங் கொண்டு இந்த மூன்றாம் திருமுறையின்
குறிப்புரையை நிறைவு செய்துள்ளார்.

     பாடல்களுக்கு விரைவில் பொழிப்புரை எழுதி வழங்கும் ஆற்றலுடைய
இவர் பொழிப்புரையில் மூலப்பகுதிகளுக்கு உரையாக அமைந்த
சொற்றொடர்கள் எவை? பொருள் இணைப்புக்காக வருவித்துச் சேர்க்கப்பட்ட
சொற்கள் எவை? என்ற செய்தி தெளிவாகப் புலப்படாதாகலின், பாடல்களின்
பல பகுதிகளுக்குப் பதவுரை வரைந்துள்ளார்.

     பதவுரை வரையும்போது அச்சொற்களின் பொருளைத் தெரிவிப்பதோடு
அச்சொற்களின் முடிக்குஞ் சொல்லையும் பெரும்பாலும் இணைத்தே
குறிப்பிட்டுள்ளார். உவம உருபுகளாக வழங்கும் சொற்கள், இன்றியமையாத
நுட்பமான இலக்கணக்