பக்கம் எண் :

472திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2904. ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
  வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே. 5

2905. அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
  பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே. 6


மிக்க காம வேட்கையான். உறு-மிக்க. மலையைப் பொருவும் தோள்.
பொருதோள் வினைத்தொகை. இற-சிதைய. செற்ற-அழித்த. வில்லி-இராமன்.
இகரம் ஆண்பாலில் வந்தது. விரை மருவும் கடல் - புலவு நாறுங்கடலை
இங்ஙனம் கூறியது. இறைவனைத் தொழ உவந்து நீராடிய அரம்பை மாதர்
முதலியோரது மெய்ப்பூசல் என்க. ஒதம் - அலை. அரை - இடுப்பின்
கண்ணே. அரை - ஆகுபெயர். நல்லன் - நல்லவன், சிவபிரானுக்கு உரிய
பெயர். “நல்லானை நான் மறையோடாறங்கம் வல்லானை”.

     5. பொ-ரை: கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள்
தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய்,
வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எந்தையாகிய
சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந்தருளுகின்றான். வீடுபேற்றை
நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

     கு-ரை: ஊறு - திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி,
ஐந்தனுள் அத்தலைக்குமட்டும் வாய்த்ததால் ‘ஊறுடை வெள்தலை’ எனப்
பட்டது. ‘சுவை ஒளி ஊறு’ என்பவற்றில் வரும் ஊறு எனில் பொருட்
சிறப்பில்லை. (உறுவது - ஊறு. பெறுவது - பேறு) வீறு - வேறு ஒன்றிற்கு
இல்லாத அழகு. ஐயம் - பிச்சை. விறல் - வலி. வெற்றி. ஏறு - விடை.
சிவனது கொடியில் எருதுருவம் உண்டு. பெயர் - பவாதி சிவநாமங்கள்.
பிணி - பிறவிப்பிணியும் அதுபற்றி வருவனவும். பேரும் - பெயரும்.
வந்தவழி மீண்டொழியும். (முத்து. சு.)

     6. பொ-ரை: அலைகளையுடைய கடலில் அன்று அணைகட்டிக்
கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள்