2907. |
பெருவரை
யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட |
|
ப அருவரை
யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே. 8 |
|
* * * * * *
* * 9 |
2908.
|
சாக்கியர்
வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார் |
|
வாக்கிய
லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே. 10 |
8.
பொ-ரை: பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ்
குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன்
தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும்
செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன்
என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி,
இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஒருவனே
எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான்.
கு-ரை:
பெயர் - புகழ். சாய்கெட - சாய்ந்து ஒழிய. சாய்தல் -
(குறைதல்) ஓய்தல் என்பன. தொல் உரியியல் உலகேழெனத் திசை
பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
என்னும் திருவாசகத்தோடு ஒப்பிடுக.
9.
* * * * * * * * *
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை
யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப்பற்றி நிற்காது,
ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய
இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை
ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும்
உண்டாகும்.
கு-ரை:
ஏ(வு)க்கு - அம்புக்கு. கோளிலி எம் பெருமாற்கு என்புழிப்
போல இராமேச்சுரம் ஆக்கித் தனது தலமாகச் செய்து
|