2924. |
ஊனம
ரும்முட லுள்ளிருந் தவ்வுமை |
|
பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை
யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை
வனன்றே.
4 |
மங்கை - மலைகளோடு
மிக்க உறவுடைய மங்கையாகிய உமாதேவி,
இமயமலை, கயிலை நீங்கிய ஏனையமலைகளுக்கும் அரசனாதலின்
அம்மலைகளெல்லாம் அம்பிகைக்கு உரியவாயின. கயிலைமலை
அவளுடையதேயானால் மலை மல்கு மங்கை என்பதில் யாது
வியப்பு? குலை - சோலைகளின் மரங்களிற் காய்த்துத் தொங்கும்
குலைகள். அலை - சினையாகு பெயராய்க் கங்கையை யுணர்த்திற்று.
உகப்பு
- உயர்வு என்னும் பொருளில் வரும் உரிச்சொல். உகந்த -
உவந்த, விரும்பிய என்ற பொருளில் இங்கு வந்தது. ஆயிரம் பேருகந்
தானும் ஆரூரமர்ந்த அம்மானே என்னும் அப்ப மூர்த்திகள் தேவாரம்
முதலியவற்றானும் அறிக.
4.
பொ-ரை: இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய்
விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வானில் தவழும்
சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை அருளிச் செய்தவன்.
இடபத்தை வாகனமாக உடையவன். அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்.
கு-ரை:
ஊன் - மாமிசம். உடலுள்ளிருந்த உமைபங்கன் என்றது.
உடலில் உள்ளது உயிர். உயிரில் உள்ளது சிவம். உயிரால் உடல்
இயங்குகிறது. சிவத்தினால் உயிரியங்குகிறது. எவ்வுயிரும் ஈசன்
சந்நிதியதாகும் என்று சிவஞான சித்தியார் ஒற்றுமை நயம்பற்றி
உயிரிலிருக்கும் சிவனை உடலுள் இருப்பானாகக் கூறியது இப்பாட்டு.
மறை ஓதி - வேதங்களை
ஓதினவன். மழுவாள் வலனேந்தீ
மறையோதீ என்பது சுந்தரமூர்த்திகள் தேவாரம்.
|