பக்கம் எண் :

524திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  18. திருவைகல் மாடக்கோயில்

பதிக வரலாறு:

     திருக்கோழம்பத்தைக்கண்டு இறைஞ்சி, மன்றுளார் மகிழ் வைகல்
மாடக்கோயிலைச்சார்ந்து, அதில் மன்னிய மருந்தை வழிபட்டுப் போற்றி
மொழிந்த செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப. தொ. எண்: 276   பதிக எண்:18

திருச்சிற்றம்பலம்

2987. துளமதி யுடைமறி தோன்று கையினர்
  இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.            1

2988. மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
  மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.     2


     1. பொ-ரை: இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை
ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை அணிந்துள்ள சடையன். எம்
தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள்
வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை
வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: து(ள்)ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து உடையமான்
கன்று. உளம் - உள்ளம். வைகல் - தலத்தின் பெயர். மாடக்கோயில்
ஆலயத்தின் பெயர்.

     2. பொ-ரை: இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர்.
வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய கரிய கண்ணுடைய
மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும்