3173. |
உண்ணிலா
வாவியா யோங்குதன் றன்மையை |
|
விண்ணிலா
ரறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே. 4 |
3174. |
வருந்திவா
னோர்கள்வந் தடையமா நஞ்சுதான் |
|
அருந்தியா
ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே. 5 |
முதலியவை செல்வத்தினால்
மிகச்சிறப்புற நடக்கும் புகழையுடைய தென்
குடித்திட்டை என்பது பின்னிரண்டடிக்கும் பொருள். பருவ நாளொடும்
விழாவொடும், என ஒடு, உம் இரண்டையும் முன்னும் கூட்டுக. மூன்றன்
உருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். பருவம் - அமாவாசை,
பௌர்ணமி என்பவை.
4.
பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும்
தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத உட்பொருளாக
விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள்
பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல், தெளிந்த நிலவின் ஒளி பரவும்
திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
கு-ரை:
உள் - உயிருக்குள். நிலாவு - விளங்கும். ஆவியாய் -
உயிராய். ஓங்கும் தம் தன்மை. உயிர்க்குயிராம் ஒருவனையும் என வருதல்
காண்க. (சிவஞானசித்தியார். சூ. 9. பா. 5) ஆர் - நிறைந்த. எண்ணில் -
அளவற்ற. அழகையுடைய மணிகள் அழுத்திய பொன் மாளிகையின்மேல்
தெளிவான நிலாவிரித்துப் பரவும் தென்குடித்திட்டை.
5.
பொ-ரை: திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின்
வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய
அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு
அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர், செருந்தி, மாதவி, செண்பகம்
இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும்.
கு-ரை:
வந்துஅடைய - வந்து சரண்புக. தான் நஞ்சு அருந்தி
|