பக்கம் எண் :

654திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
     காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில்
     ஊணுகந்த வருத்தியே.                 6

3206. திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
       செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு
     கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற
     முரைத்தும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின்
     மூன்றுமாட்டிய வண்ணமே.              7


அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க் கலந்து வியாபித்து நிற்கும்
தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக! கயல் போன்ற
நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில்
வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் உலகத்தில் மழை பொழியச் செய்து
நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை அயலார்
பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அதில் பிச்சையேற்றுண்ணும் விருப்பம்
என்கொல்?

     கு-ரை: இறைவனுமாய் நிறை செய்கையை - உலகினுக்கும் உயிருக்கும்
தலைவனுமாய், அவையெயாகி அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற
செய்கையை. புயல் - மேகம். பொழிந்து - மழைபோல் பெய்து. பொய்
இன்மைப் பொருளில் வந்தது. அயல் - அயலார். நக - அவனைப்
பரிகசிக்கும்படியாக அது அரிந்து எனவும், அயலார், தன்னை நக அதில்
(அம்மண்டை யோட்டில்) உணவை உகந்து (உண்டு) எனவும் - இருவழியும்
கூட்டுக. வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்ததென்பது -
படைத்தற்கர்த்தா தன் தலையைப் படைத்தளிக்கும் வலியின்மையும்
படைப்போற் படைக்கும் பழையோன் இவனே என்பதும் வானவர்
தெளிவதற்காக ஒருவன் தலையைக் கொய்து, அதில் உணவு நுகர்தல்
கடவுட்டன்மைக்கு ஒக்குமா?

     7. பொ-ரை: தெளிந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத் தொண்டு
செய்யும் அன்பர்களே! மெய்ச் செல்வனாக விளங்கும்