பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)44. திருக்கழிப்பாலை்691

  கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே.     

3270. ஏரி னாருல கத்திமை யோரொடும்
  பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.        5

3271. துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர்
  கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே.        6


பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார்.
அவரே எம் கடவுள் அல்லரே?

     கு-ரை: பண் - இசையின். நலம் - இனிமை. பட - பொருந்த. வண்டு,
அறை - பாடுகின்ற. (கொன்றை). அலங்கல் உகந்த - மாலை விரும்பிய,
தலைவனார். நலம் கண்கவரும் கழிப்பாலை - எனமாற்றி, கண்ணைக் கவரும்
பொலிவை உடைய கழிப்பாலை யென்க. நலம் - பொலிவு

     5. பொ-ரை: எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு,
மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும்
சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும்
சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.

     கு-ரை: ஏரின் ஆர் - அழகால் மிகுந்த. உலகத்த -
விண்ணுலகத்திலுள்ள. இமையோரோடும் - தேவர்களுடனே;
மண்ணுலகத்திலுள்ள யாவரும் கலந்து துதிக்கின்ற. காரின் - மேகத்தினால்.
ஆர் - படியப்பட்ட. சோலை ஆர் என்பதில் செயப்பாட்டு வினைவிகுதி
குன்றியது. சீரினார் - சிறப்பை உடையவர்.

     6. பொ-ரை: துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில்
ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய