பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)44. திருக்கழிப்பாலை்693

3274. ஆட்சி யாலல ரானொடு மாலுமாய்த்
  தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யாற்றொழு வார்வினை மாயுமே.       9

3275. செய்ய நுண்டுவ ராடையி னாரொடு
  மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோகழிப் பாலையெம்
ஐயன் சேவடி யேயடைந் துய்ம்மினே.         10  


     கு-ரை: துலங்க - துளங்க (நடுங்க) போலி. ல, ள, ஒற்றுமை. கலங்கள்
வந்துலவும் கழிப்பாலை என்றதனால் அது ஒரு துறைமுகப்பட்டினமாய்
இருக்கவேண்டும்.

     9. பொ-ரை: தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும்
தாங்கள் செய்கின்ற படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களின்
ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திரு
முடியையும், திருவடியையும் அறிய முற்பட்டு, தமது தாழ்ச்சியால் அவற்றை
அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர். நூலறிவாலும், ஆன்ம அறிவாலும்
அறியப்படாதவனான சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய
வினைகள் யாவும் மாயும்.

     கு-ரை: ஆட்சியால் - படைத்தலும் காத்தலுமாகிய தொழிலை
ஆளுகிறோம் என்னும் செருக்கினால், ஆட்சி என்ற சொல் காரியம்
காரணமாக உபசரிக்கப்பட்டது. தாழ்ச்சியால் - அது தங்கள்
மாட்டின்மையாகிய குறைவால்; அறியாது தளர்ந்தனர். தாட்சி -
தாழ்ச்சியென்பதன் மரூஉ. அல்லது வீரசோழிய விதிப்படி எனினும் ஆம்.
அன்றி தாள்+சி= முயற்சியின் தன்மையெனினும் ஆம்; ஆயின் சி என்பது
பண்புப்பெயர் விகுதி யென்க. காட்சியால் - நூலறிவாலும் ஆன்ம அறிவாலும்
அறியப்படாதவன். மாட்சி - மாணுதல். சி. தொழிற்பெயர் விகுதி. மாட்சியால்
தற்போதம் அற்றுத் தொழுவார் வினைமாயும்.

     10. பொ-ரை: சிவந்த மெல்லிய மஞ்சட் காவி உடைகளை உடுத்தும்
புத்தர்களோடும், அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய
சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ? திருக்கழிப்