3325. |
மந்த ரம்மன பாவங்கண் மேவிய |
|
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே. 6 |
3326. |
நரக மேழ்புக நாடின ராயினும் |
|
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே. 7 |
எல்லோருக்கும் நன்மையே
செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான
‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
குணம் - நற்குணமும். பல நன்மைகள் - பல நல்ல
ஒழுக்கங்களும். இல்லாரேனும் - இல்லாதவராயினும். நல்லான் -
சிவபெருமானுக்கொரு பெயர். “நல்லானை நல்லான நான்மறையொடு
ஆறங்கம் வல்லானை” என்ற அப்பர் வாக்காலும் அறிக.
6.
பொ-ரை: மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து
பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்
களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும்.
அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி
என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ’நமச்சிவாய’
என்பதாகும்.
கு-ரை:
மந்தரம் அன - மந்தர மலைபோன்ற (பாவங்கள்). மன்னிய -
நிலை பெற்ற. பந்தனையவர் - பாசங்களால் கட்டுண்டவர். அவர் தாமும் -
அத்தகையோரும். பகர்வரேல் - உச்சரிப்பார்களானால். வல்வினை சிந்தும்
செல்வமும் மல்கும் (பெருகும்) நந்தி - சிவபெருமான். “பேர்நந்தி உந்தியின்
மேலசைத்த கச்சின் அழகு” என்றார் அப்பர். முதலிரண்டடிக்குப் பாவங்கள்
பந்தனை இவையுடைய அத்தகையோரும் எனப் பொருள்கோடலன்றிப்
பாவங்கள் மன்னிய பாசங்களாற் கட்டுண்டவர்களும் என ஓரிடத்திற்கு
ஆக்குதலுமாம். மந்தரம் - பாற்கடல் கடைந்த மலை.
7.
பொ-ரை: எழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும்
திரவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர
கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர்.
|