பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)50. திருத் தண்டலை நீணெறி725

  சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.     4

  * * * * * * * * *                      5,6,7

3335. இலங்கை வேந்த னிருபது தோளிற
  விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடம்
சலங்கொ ளிப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.  8

3336. கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென்
  றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.      9


சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை
நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப்
போற்றுங்கள்.

     கு-ரை: தவந்த - வெந்த, என்பும் - எலும்பும், தவளப்பொடி -
வெண்திருநீறு, தவந்த என்ற அடையை அடுத்தும் ஒட்டுக. வெந்த
வெண்ணீறணிந்து என்ற வாக்குங் காண்க. நிவந்த - மிகுந்த, ஓங்கிய.      

     5,6,7. * * * * * * * * *

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனின் இருபது
தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும்,
சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச் செல்வவளம் மிகுந்த
திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத்
தரிசித்து வழிபடுங்கள்.

     கு-ரை: விலங்கல் - கைலைமலை, ஆறு தனதாகக் கொண்ட சிப்பி
முத்து சங்கு, ஆகிய பொருள்களை, நிலம் தனதாகக் கொள்ளும் வளம்
பொருந்திய தண்டலை நீணெறி.

     9. பொ-ரை: சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக் கமலத்தில்
தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள