பக்கம் எண் :

758திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3378. கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
  படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.   7

3379. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
  ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்


செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா, மன்னுயிர்களின் தீவினைகளை
நீக்குவதற்கா, பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று
கேட்பீராயின், இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள்
செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம்.
இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன்
செயல்கட்குக் காரணம்.

     கு-ரை: ஆடும் எனவும் நாட்டல் ஆமே என்றது - ஆடுதல், கூற்றம்
உதைத்தல், வேதம் பாடுதல், என்னும் இறைவன் செயலாகிய இம் மூன்றும்
புகழ்கருதியோ ஆன்மாக்களை உய்விக்கவேண்டியோ என ஆராய்வீராகில்
புகழலால் அவனுக்கு ஆவது என்னை? துன்பம் அடைதலும் அதற்குக்
காரணமான பிறப்பும் நீங்கி உயிர்கள் உய்தி கூட வேண்டும் என்னும்
நிர்ஹேதுக கிருபையன்றிப் பிறிதென்? உயிர்களை உய்விக்கக் கருதியே
இறைவன் இவை செய்கிறான் என்றபடி.

     7. பொ-ரை: சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி,
நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத்
திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற, சிவ பூசைக்கு
இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச, அது
மழுவாக மாறிக் காலை வெட்டினாலும், முக்கண் மூர்த்தியான் சிவபெருமான்
அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால்
அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ?

     கு-ரை: கடி ... ... அன்றே என்றது:- “அரனடிக்கு அன்பர் செய்யும்
பாவமும் அறமதாகும், பரனடிக்கு அன்பிலார்செய் புண்ணியம் பாவமாகும்,
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினில் பாலன்செய்த
பாதகம் நன்மையாய்த்தே” (சித்தியார் - சுபக். 29)

     8. பொ-ரை: வேதத்தை அருளிச் செய்தவனாய், வேதப்
பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு,