3439. |
பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் |
|
பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க
டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்
வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி
செப்புதுமே. 2 |
3440. |
சந்திர சேகரனே யரு ளாயென்று |
|
தண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்க
டொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழ
வோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம்
வக்கரையே. 3 |
2.
பொ-ரை: மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக்
காலால் சிவபெருமான் உதைத்தவன். பருத்த தோள்களை உடைய உமா
தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். எண்ணற்ற
தேவர்களால் தொழுது போற்றப்படுபவன். முப்புரங்கள் எரிந்து
சாம்பலாகுமாறு செய்தவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த
வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும்
அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக!
கு-ரை:
ஏய்ந்தவன் - பொருந்தியவன். தேய்ந்து - தன்
கலைகளெல்லாம் தேய்ந்து. (சரண்புக்க) இளம்பிறைசேர்ந்த, சடையான்.
அடி - திருவடிப் புகழ்ச்சியை. செப்புதும் - சொல்லுவோம்.
3.
பொ-ரை: சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே!
அருள்புரிவீராக என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன்
முதலான தேவர்கள் தொழுது போற்ற, அந்தரத்தில் திரிந்து கேடுகளை
விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து
சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும்
|