|
மானன
மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்க ளெரி செய்த
தலைமகனே. 5 |
3443. |
கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் |
|
வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி
சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை
மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல்
பான்மையனே. 6 |
ஊமத்த மலரையும் சூடி,
நல்ல மான்போன்ற மென்மையான விழிகளை
யுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை
எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான்.
கு-ரை:
ஏனம் - பன்றி. ஆமையும் - ஆமையோடும். பூண்டு -
அணிந்து. அதனால் மகிழ்ச்சியுற்று. மத்தம் - பொன்னூமத்தை.
6.
பொ-ரை: கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும்,
ஊமத்த மலரும், ஒளி பொருந்திய பாம்பும், கங்கையும் சடைமுடியில் திகழ,
கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி, நல்ல கச்சணிந்த மென்மையான
முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். அப்பெருமான் இப்பூவுலகில்
வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன்.
கு-ரை:
கார் - கார்காலத்தில். மலி - மிகுதியாக மலரும், கொன்றை,
வாள் அரவு - ஒளிபொருந்திய பாம்பு. நிரம்பாத மதி - கலை நிரம்பாத
பிறை. பார் - பூமியின்கண். மலிவெண்தலை - வெண்மை மிக்க தலை. பலி
கொண்டுழல் - பிச்சையேற்றுத் திரிகின்ற, பான்மையன்.
|