3475. |
ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் |
|
சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி
மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென்
றுரையீரே. 5 |
3476. |
குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே |
|
குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா
மடநாராய் |
மாலைகளையுடைய சிறுத்தொண்டர்
பணிசெய்யத் திருச்செங்காட்டங்குடியில்
வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய
சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.
கு-ரை:
கான் - கடற்கரைச் சோலை. (வயல், கழி, கடல் ஆகிய
இவ்விடங்களில் வரும் நீரில்) மீன்இரிய - சிறுமீன் ஓட (பெரிய மீனை)
இரை தேரும், எனத் தனித்தனி சென்றியையும், வானமரும் சடையார்க்கு -
செவ்வானம் போலும் சடையையுடைய பெருமானுக்கு. என் வருத்தம்
உரையாய்
5.
பொ-ரை: ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற
கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய
உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க
சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்
தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம்
சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.
கு-ரை:
கழனியின் கண்ணே சிறகையுலர்த்துகின்ற பார் அல்வாய் -
நெடிய மூக்கையுடைய. சிறு குருகே - சிறிய உள்ளான் பறவையே, பயில் -
அடர்ந்த, தூவி - இறகையுடைய நாரையே.
6.
பொ-ரை: தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின்
துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ?
|