|
நிலவஞ்சேர்
நுண்ணிடைய
நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார்
திருவேட்டக் குடியாரே. 4 |
3507. |
பங்கமார் கடலலறப் |
|
பருவரையோ
டரவுழலச்
செங்கண்மால் கடையவெழு
நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க்
கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந்
திருவேட்டக் குடியாரே. 5 |
கு-ரை:
கழிக்கானல் எங்கும் என்க. அலவன் சேர் - கடல் நண்டுகள்
சேர்ந்த. அணை - குவியலை. நிலவம்சேர் - ஒளி பொருந்திய. இடைய -
இடையையுடையவளாகிய, குறிப்புப் பெயரெச்சம். நேர் இழையாள் - அழகான
அணிகலனை யணிந்தவள். நிலவு என்னும் சொல் அம்சாரியை பெற்றது.
5.
பொ-ரை: சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற, மேருமலையை
மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, சிவந்த
கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர்
சிவமூர்த்தி. நால் வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த
சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய
அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான்
திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
பங்கம் - சேறு. பருவரையோடு - பருத்த (மந்தர)
மலையுடனே. அரவுஉழல - வாசுகி என்னும் பாம்புசுழல. மால் - திருமால்.
கடைய - (முன்னின்று) கடைய. எழு உண்டான. நான்மறை - அங்கத்தோடு
கூடிய நான்கு வேதங்களையுமுணர்ந்த. நால்வருக்கு அறம் பொருளின்
பயன் -அறநூற் பொருளின் பயனாகிய அநுபவத்தை, அளித்த -
உணர்த்தியருளிய. திங்கள்சேர் சடையார்.
|