3640. |
செய்யதிரு
மேனிமிசை வெண்பொடி |
|
யணிந்துகரு
மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ
டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ்
;யாதவவர் வேதிகுடியே. 6 |
யிருக்கும்படி. தக்க
அருள்வைத்த - சிறந்த கருணைசெய்த (அரனார்) இனிது
- நன்கு, (தங்கும்) நகர்தான் - தலமாவது. அரவம் உற்ற - விளையாடும்
மகளிரின் ஆரவாரம் பொருந்திய. கொக்கு பொழில் - மாமரச்சோலைகளில்.
நிழல் - மகளிரின் மேனியின் ஒளியானது. வெற்றிபற்றி - மாந்தளிர்களை
வென்ற வெற்றியைப் பற்றி. வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள்.
இசைகுலாம் - பாராட்டி இசைபாடிக் கொண்டாடும் (திருவேதிகுடி). மிக்க
அமரர் - உடலின் ஒளியால் மிக்க தேவர்கள். மெச்சி - அம்மகளிர்க்கு
மெச்சிப் (பாராட்டும் திருவேதிகுடி) அச்சம் இடர்போக
(தன்னையடைந்தவர்களுக்கு) அச்சமும் துன்பமும் நீங்க. இனிது -
நன்மையை. நல்கு - அளிக்கும். (திருவேதிகுடி) பாராட்டும் என ஒரு
சொல் வருவித்துரைக்க.
6.
பொ - ரை: சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில்
வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப்
போர்த்தவர். 'பிச்சையிடுங்கள்' என்று இளமைவாய்ந்த உமாதேவியாரோடு
வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும்,
மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக்
கொடையளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும்
ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
கு
- ரை:செய்ய திருமேனிமிசை
- சிவந்த திருமேனியில். வெண்
பொடி அணிந்து - வெண்மையான திருநீற்றையணிந்து. கருமான்
உரிவையைப் போர்த்து - கரிய மிருகமாகிய யானையின் தோலைப் போர்த்து.
ஐயம் இடும் என்று - பிச்சை இடுங்கள் என்று.
|