3643. |
பூவின்மிசை
யந்தணனொ டாழிபொலி |
|
யங்கையனு
நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென
நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய
தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதிகுடியே. 9 |
இளங்கொடிபோன்ற.
மடந்தையரும் - பெண்களும். ஆடவரும் -
ஆண்களும். மொய்த்த - நிறையப் பூசிய, கலவை - கலவைச் சந்தனத்தின்.
விரை - வாசனையும். குழல் - மாதர் கூந்தலின். மிகக் கமழ - மிகவும்
மணம் வீச, (அது) விண் - தேவருலகில். இசை உலாவு - புகழ்பெறச்
சுற்றிலும் கமழும் திருவேதிகுடியே.
9.
பொ-ரை: தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன்,
சக்கராயுத்தை ஏந்திய அழகிய கையையுடைய திருமாலும் தேட, தீப்
பிழம்பாகி, இப்பெருமானை அன்றி வேறு கடவுள் இல்லை என ஏத்தப்
பெறும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, புலவர்கள்
ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை உரைக்க, கேள்விச்
செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவிமடுக்குமாறு, செல்வம்
மிகுந்த நெடிய மாடமாளிகைகளும், வீதிகளும் திகழ்கின்ற திருவேதிகுடி
என்பதாகும்.
கு
- ரை: பூவின்மிசை - தாமரை மலரில் வசிக்கும். அந்தணனொடு
- பிரமனுடன். ஆழிபொலி - சக்கராயுதம் விளங்கும். அங்கையனும் -
அகங்கையை யுடைவனாகிய திருமாலும். நேட - தேட. எரியாய் -
தீப்பிழம்பாகி, (அவ்விருவரையும் பார்த்தவர்கள்) இவர் - இப்
பிரமவிட்டுணுக்கள். தேவர் அல்லர் - கடவுளர் ஆகார். (என்றால்,) இனி,
யாவர்? - கடவுளாவார் யாவர்? (சிவபெருமானேதான்.) என - என்று
கூறும்படி. (நின்று,) திகழ்கின்றவர் - விளங்குகின்றவராகிய சிவபெருமானது
(இடம்.) பாவலர்கள் - புலவர்களின். ஓசை இயல் - ஓசையினிமையுடைய
இயற்றமிழ் நூற்பொருளை. கேள்வி - (அது), கேட்டறிதல், அறாத - நீங்காத
(கொடையாளர்) பயில்வு ஆம் - வாழ்வதாகிய (வேதிகுடி). மேவு அரிய -
வேறெங்கும் தங்குதல் இல்லாத. செல்வம் - செல்வத்தையுடைய, நெடுமாடம்
வளர் - நெடிய மாடங்கள் பெருகும். வீதிநிகழ் - வீதிகள் பொருந்திய,
(வேதிகுடியே.)
|