பக்கம் எண் :

988திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3651. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
       வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு
     பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி
     பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
     கம்பம்வரு கோகரணமே.               6


வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக்
கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க
அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும்
திருக்கோகரணமாகும்.

     கு-ரை: தொடைத்தலை மலைத்து - தலைமாலையை அணிந்து.
முடியின் சடைத்தலை. இதழி - கொன்றைமலரையும். எருக்கு - எருக்க
மலரையும். அலரி - அலரிமலரையும். வன்னி - வன்னிப் பத்திரங்களையும்.
மிலைச்சிய - அணிந்த, எம்ஆதி - எமது முதல்வராகிய சிவபெருமான்.
பயில்கின்ற இடமாம் - வாழ்கின்ற இடமாம். படைத்தலைபிடித்து -
ஆயுதங்களின் அடிப்பாகங்களைப் பற்றி. மறம் - வெற்றி பொருந்திய.
வாளர்களொடு - வாளாயுதத்தையேந்திய வீரர்களுடனே. வேடர்கள் பயின்று.
குழுமி - வேடர்களை நண்பு கொண்டு கூடி. அலைநதி -
அலைகளையுடைய நதியில். குடைத்து - குடைந்து. பாடிய - முழுகி
(வணங்க). நின்று - (அவர்க்கு எதிரில் தோன்றி) நின்று. பழி - பழிபாவம்
முதலியவை. தீர - நீங்குமாறு. நல்கு - அருள்புரியும் கோகரணம். குதைத்து
எதுகை நோக்கி வலித்தது.

     6. பொ-ரை: சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர்.
திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி
ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்
படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு
சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற
அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும்.

     கு-ரை: திருமேனிமிசை, நீறு ஆடி - விபூதி பூசி. வார் கழல் சிலம்பு
நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த ஒலி செய்ய. ஏறு
- இடபமானது. விளையாடவிசைகொண்டு - விளையாடு