பொன்னைப் பாடினார் என்றால் பொன்னார் மேனியனாகிய இறைவனிடத்துப் பொன் வேண்டிப் பாடினார் என்பதும், பிரதிப்பயன் கருதாப் பொன்னைப் போன்ற பொன்னார் மேனியனைப் பாடினார் என்பதும் பொருளாகக் கொள்ளலாம். நான்காம் திருமுறை: நான்காம் திருமுறையில் மொத்தம் 113 பதிகங்கள் உள்ளன. இவற்றில் முதல் திருப்பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்துள்ளது. பண் அமைப்பில், கொல்லிப்பண்-1, காந்தாரம்-6, பியந்தைக்காந்தாரம் -1, சாதாரி -1, காந்தார பஞ்சமம் -2, பழந்தக்கராகம் -2, பழம்பஞ்சுரம் -2, இந்தளம் -3, சீகாமரம்-2, குறிஞ்சி -1 ஆகிய 21 பதிகங்களே பண்ணமைப்பில் உள்ளன. திருநேரிசை 58உம், திருவிருத்தம் 34உம் ஆக 92 பதிகங்களும் யாப்பமைதியில் உள்ளன. திருவிருத்தம் 34இல் முதலில் உள்ள “பாளையுடை” என்ற பதிகமும், “கருநட்ட கண்டனை” என்ற பதிகமும் கொல்லிப்பண் என்று குறிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தொண்ணுற்றிரண்டும் நேரிசைக்கொல்லி என்றும் விருத்தக் கொல்லி என்றும் கொல்லிப் பண்ணாகவே கொள்ளப்படுகின்றன. அற்புதத் திருப்பதிகங்கள்: நான்காம் திருமுறையில் பாடல்பெற்ற தலங்கள் 50 உள்ளன. அற்புதத் திருப்பதிகங்களாக7 பதிகங்கள் உள்ளன. (ப.1, ப.2, ப.11, ப.110, ப.18, ப.97, ப.3) 1. | சூலை நோய் நீங்கப் பாடியருளியது. | 2. | யானையைவிட்டு இடறச் சொன்னபோது பாடியருளியது. | 3. | கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்தியபொழுது பாடியுய்ந்தது. | 4. | சூலக்குறி, இடபக்குறி பொறிக்கவேண்டியது. | 5. | மூத்த திருநாவுக்கரசரை உயிர்ப்பிக்கப்பாடியருளியது. | 6. | திருச்சத்திமுற்றத்தில் திருவடிசூட்டவேண்டிப் பாடியருளியது. | 7. | திருக்கயிலைக் காட்சியை ஐயாற்றில் கண்டு வழிபட்டபோதுபாடியருளியது. |
இந்த நான்காம் திருமுறையில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு.
|