(பா. 900) பாடல் உரையில் வரும் ‘வளைக்கரம் கூப்பி நின்று’ என்ற தொடர்க்குரிய விளக்கப்பகுதி இனியவோர் சொல்லாராய்ச்சிப் பகுதியாகும். “குவிபு என்றதன் மரூஉவே கூப்பு என்பது. குவிபிட்டான், கூப்பிட்டான் என்று மருவியதும் அறிக. கைகுவிதலும் வாய்குவிதலும் பற்றி உண்டான சொல். குவிபு - கூவ்பு - கூம்பு - கூப்பு என்னும் முறைமையில் மருவிற்று”. “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்” என்ற 913ஆம் பாடற் பகுதிக்கமைந்த உரைப்பகுதி உன்னி உன்னி உவத்தற்குரியது. ஈன்றாள், எந்தை, உடன் தோன்றினர் என்ற மூன்றும் மாதினியார் முதலிய மூவரையுமே குறித்தன என்று தெளிவாக்கியுள்ளார். இப்பாடலுள் ‘இமையவர்க்கன்பன்’ என்ற தொடர் உமையவட்கன்பன் என்பதை நோக்க. (பா. 914) இமையவட்கன்பன் என்றிருந்திருக்கலாமோ என்று சிந்தித்திருக்கும் பகுதி மெய்யன்பர் உணர்விற்குரியவோரிடமாம். கருதல் என்றதன் மரூஉவே காதல் என்பது என்று உரைத்து, அதற்குப் பத்துப் பாட்டுச் சான்று தந்திருப்பது உணரத்தக்கது. இச்சொல்லாராய்ச்சி தமிழ் உலகுக்கு இவ்வுரையாசிரியர் தந்துள்ள புதிய படைப்புக்களில் ஒன்று எனலாம். இதனை ஒப்புவோரும் உளராகலாம்; ஒவ்வாதோரும் உளராகலாம். ஆயினும் இஃதோர் புதிய சிந்தனையாதலைத் தமிழ் கூறுநல்உலகு உன்னுதல் தக்கது என்பது என் கருத்தாகும். இச்செய்தியை 64ஆம் பாடல் உரையிலும் காண்கின்றோம். ‘அல்லாக்குழி வீழ்ந்து அயர்வுறுவேன்’ என்ற 936ஆம் பாடற் பகுதியில், பொருந்துவதாகிய சாத்திரக் கருத்தைச் சித்தியார் கொண்டு குறித்திருத்தல் உணரத்தக்கது. ‘இலங்கையர் காவலன்’ என்ற (பா.953) தொடரில் காவலன் என்பதனை விளக்கியுள்ளனர். ‘கருவுற்றநாள் முதலா’ எனத் தொடங்கும் (பா. 961) திருவிருத்தமும், அதற்கமைந்த உரையும் அருள் அநுபவம் விளைந்தாலன்றி உணரவியலாத உயர்வுடையன என்று தோன்றுகின்றன. படிமம் என்ற சொல் (பா.988) பிரதிமா என்ற வடசொல்லின் திரிபு என்பர் நம் உரையாசிரியர். இன்னோரன்ன பிறவிடங்களிலெல்லாம் தமிழ்ச் சொற்களைத் தமிழ்ச் சொல்லாராய்ச்சி அடிப்படையில் ஆய்ந்து நிறுவும் உறுதிப்பாடு
|