75. திருவெண்ணியூர் |
சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். சிதம்பரத்துக்கு கிழக்கே 2கி.மீ.தூரத்திலுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ்பால் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. |
இத்தலம் மூங்கில்வனம் எனவும் கூறப்பெறும், அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதாஸ்திரம் ஏந்திய இறைவன் திருவுருவமும், அர்ச்சுனன் தவநிலையைக் காட்டும் திருவுருவமும் இருக்கின்றன. இறைவன் வேடனாக வந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை 'வேடனார் உறைவேட்களம்' என்ற அப்பர் வாக்கும் நன்கு விளக்கும். |
இறைவன் பெயர் பாசுபதேசுவரர், இறைவியின் பெயர் நல்லநாயகி, கோயிலுக்கெதிரில் தீர்த்தம் உண்டு. புதிய திருப்பணி. திருஞானசம்பந்த சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதற்கு அஞ்சி, இத்தலத்திலேயே தங்கிச் சிதம்பரத்தைத் தரிசித்தார் என்பது பெரிய புராண வரலாறு. |
கல்வெட்டு: |
சகம் 1488-ல் (கி.பி.1556-ல்) சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத் திருவேட்களங் கிராமத்தை அச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது.1 |
|
1259 of 1913. |
திருத்தல யாத்திரை | மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே | -தாயுமானவர். | நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே. | -திருமூலர். | | | |