பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு55

பொருள் கொண்டமை நயனொடு நன்றி பயக்கும் பயனுடைய உரையாகும்.
     "ஒத்தொவ்வாத உற்றார்கள்" என்பதற்கு, (தி.5.ப.77.பா.7) 'செல்வம் உள்ளபோது ஒத்தும், செல்வம் இல்லாதபோது ஒவ்வாதும், புறத்தால் கலந்து, அகத்தால் கலவாத உறவினர்' எனக் கூறியுள்ள பொருள், உலகியலை உள்ளவாறு உணர்த்தும் இனிய உரையாம்.
     மற்றும் இன்னோரன்னவாக இதன்கண் பொதிந்துள்ள பல நயம் வாயந்த உரைகள் உணர்வோடு உள்ளத்தை உவகையில் திளைக்கச்செய்வனவாம்.
     மற்றும் இன்னோரன்னவாக இதன்கண் பொதிந்துள்ள பல நயம் வாயந்த உரைகள் உணர்வோடு உள்ளத்தை உவகையில் திளைக்கச்செய்வனவாம்.
     பல தொடர்களுக்குப் பொதுப்பொருள்கள் கூறியொழியாது, சிறந்த விழுப்பொருள் கண்டு எழுதியிருத்தல் இவ்வுரைக்கென்று அமைந்ததோர் தனிச்சிறப்பாகும். அவைகளுள்ளும் சிலவற்றைக் குறிப்பிடுதல் பயன் தருவதாகும்.
     "கருவினைக்கடல் வாய்விட முண்டவெம் - திருவினை" என்பதில் 'கரு' என்பதற்கு, (தி.5.ப.4.பா.8) 'கருவாய் இருப்பவன்' என்றொழியாது, 'உயிர்கள் தோன்றுங்கால் அவ்வக் கருவின்கண் அவ்வவ்வுயிர்களை அவ்வவற்றின் வினைக்கீடாக விழச்செய்து, அவற்றின் உடம்புகளையும், கரணங்களையும், ஆண்டைக்குப் பொருந்தும் நுகர்ச்சிகளையும் தந்து வளர்ப்போன்' என்று உரைத்து, மேலும் 'இனி உலக முதற்காரணமாகிய மாயைக்குத் தான் தாரகமாய் நின்று தனது சத்தி சங்கற்பத்தால் உலகைத் தோற்றுவித்தல்பற்றி முதல்வனைக் கரு என்றார் எனினும் அமையும். உலகுக்கெல்லாம் வித்தவன்காண் எனச் சுவாமிகள் பின் அருளிச்செய்தல் காண்க, என்று உரைத்து, 'தத் ஆத்மாநம் அகுருத' (அது தன்னைத்தானே ஆக்கியது) என்னும் தைத்திரீய உரைக்கும் இதுவே கருத்து என்க' என விளக்கியிருத்தல் மிகச் சிறந்ததோர் உரையாகும்.
     "எம்மை யாரிலை யானுமு ளேனலேன்" என்னும் திருப்பாடற்கு, (தி.5.ப.7.பா.6) சுவாமிகளது வரலாறே பொருளாக அகச்சான்றுபடப் பொருள் விரித்திருத்தல் பெரிதும் அரியதோர் உரையாகும்.
     "பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்" என்பதில் 'பஞ்ச மந்திரம்'