(ஐந்தாம் திருமுறை) | ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு | 61 | |
| ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுறைகளை மிகவும் ஆர்வத்தோடும் அருளோடும் சிறந்த பல விளக்கங்களுடன் வெளிவரச் செய்துவருகின்றார்கள். அவ் வெளியீடுகள் அனைத்தும் செந்தமிழ்ச் சொக்கன் தண்ணருள் வளத்தால் அவர்கள் திருவுளப்பாங்கின்படியே இனிது வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஐந்தாந் திருமுறைக்குப் பின் ஏனைய திருமுறைகளும் இனிது வெளிவர அப்பெருமானது பேரருள் முன்னிற்பதாக வாழ்க கயிலைக் குருமணியவர்கள்! வளர்க திருநெறிப் பணிகள்! | திருத்தொண்டர் புராண சாரம் | போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப் பொருவில்கொறுக் கையதிபர் புகழ் னார்பால் மாற்றருமன் பினில்திலக வதியாம் மாது வந்துதித்த பின்புமருள் நீக்கி யாரும் தோற்றியமண் சமயம்உறு துயரம் நீங்கத் துணைவரருள் தரவந்த சூலை நோயால் பாற்றருநீள் இடரெய்திப் பாடலிபுத் திரத்தில் பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார். வந்துதமக் கையர்அருளால் நீறு சாத்தி வண்தமிழால் நோய்தீர்ந்து வாக்கின் மன்னாய் வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி வியன்சூலம் கொடியிடபம் விளங்கச் சாத்தி அந்தமில்அப் பூதிமகன் அரவு மாற்றி அருட்காசு பெற்றுமறை அடைப்பு நீக்கிப் புந்திமகிழ்ந் தையாற்றில் கயிலை கண்டு பூம்புகலூர் அரன்பாதம் பொருந்தி னாரே. | -உமாபதி சிவம். | | | | | |
|
|