5. பொ-ரை: காலையில் சென்று கலந்து நீரில் முழ்கினாலும், வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும், ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன்? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை. கு-ரை: காலை சென்று - சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னுள்ள காலைப்போதிலேயே சென்று. கலந்து - தண்ணீரோடுகூடி. வேலைதோறும் - இடந்தோறும். விதிவழி - நீதி நூல் வழியே. நிற்கில்என் - ஓழுகினால் விளையும் பயன்யாது? ஆலை - வேள்வி செய்யுமிடம். ஏல - மனம்பொருந்த. 6.பொ-ரை: காட்டுப பகுதிகளிற் கலந்து திரிந்தாலும், இழிவின்றிப் பெருந்தவம் செய்தாலும், ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன்? ஞானமயமாகியன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை. கு-ரை: கானநாடு - காடும் நாடும். கலந்து மாறுமாறுக் கூடி. திரியிலென் - ஷேத்திராடனம் புரிவதால் என்ன பயன் விளையும். ஈனம் - குற்றம். இரும் - பெரிய. ஊனை உண்டல் ஓழிந்து - ஊனுண்டலை விடுத்து. வான் நோக்கிலென் - மேலுலக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் என்ன பயன்? ஞானன் - ஞானவடிவினன். 7.பொ-ரை: வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும், உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன்? ஆடல்வேடத்தை |