| 2802. | மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் | | | மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு | | | தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண் | | | சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு | | | பலர்பாடும் பழையனூ ராலங் காடு | | | பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க | | | விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை | | | வெண்காடும் அடையவினை வேறா மன்றே. | 6 |
| 2803. | கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள் | | | கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில் | | | நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் | | | நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில் | |
6. பொ-ரை: மலையரசன் மகளாகியபார் வதியொடு மகாதேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு, வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, பரந்த கடலால் சூழப்பட்டதும், அழகியதும், குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு, மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு, பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும். கு-ரை: இத் திருத்தாண்டகம், 'காடு' என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. சாய்க்காடு, கொள்ளிக்காடு இவை சோழநாட்டுத் தலங்கள். பனங்காடு, வைப்புத் தலம். மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, ஆலங்காடு, வெண்காடு இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. பழையனூர், ஆலங்காட்டிற்குச்சார்பாய் உள்ளது. விலை ஆடும் வளை - விலை ஏறப்பெற்றவளையல்கள். 7. பொ-ரை: கடுக்காயைத் தின்னும்வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும்கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர்
|