பக்கம் எண் :

1145
 
851.மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.

10

திருச்சிற்றம்பலம


எந்நாளோ!

கு-ரை: 'நீர்' என்னும் பூதத்திற்குத் தலைவன் மாயோன் என்பது பற்றியும், 'நிலம்' என்னும் பூதம் நீரில் ஒடுங்கி நீரில் தோன்றுவது என்பது பற்றியும், மாயோன், 'மண்ணினை உண்டு உமிழ்ந்தவன்' எனக் கூறப்படுவன் என்க. "எண்ணிய" என்றது. 'செய்யிய' என்னும் வினையெச்சம், "எண்ணிய, கண்குளிர" என்னும் வினையெச்சங்கள், வினைச் செவ்வெண்ணாய் நின்றன.

10. பொ-ரை: மின்னல்போலும், நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை, திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன், நல்ல, நெடிய பேரன்பினால், பல, சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய், பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள்.

கு-ரை: காதன்மை இறைவனிடத்ததாயினும், இங்கு அவனைத் திருவாரூரிற் சென்று காண்டலாகிய அதன்கண்ணதாகலின், ஆரூரைப் பாடியதாக அருளினார், "கொண்டு" என்றதன் பின், 'அணிந்து' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. "புண்ணியர்" என்றதனை, முற்றெச்சமாக்கி, முன்னே கூட்டுக. பெருமித மொழியை, 'நெடுமொழி' என்றல்போல, இங்கு, இறைவன் வாழ்த்தாகிய பெரு மொழியை, "நெடுஞ்சொல்" என்று அருளினார்.