பக்கம் எண் :

1223
 
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே.

2


945.இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழுந் நறையூர்ச் சித்தீச் சரமே.

3

 

946.மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலந் நனிபள் ளிஎழத்
திறக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே.

4



இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி, துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகி இறைவனது இடமாகும்.

கு-ரை: "ஏர்", உவம உருபு. உரித்தல், தன் காரியம் தோன்ற நின்றது. பெருமையை உணர்த்தும், 'தட' என்னும் உரிச்சொல், இங்கு, மிகுதியை உணர்த்திற்று. "நீர்" என்பதில், 'உள்' என்னும் பொருள் தரும் கண்ணுருபு விரிக்க.

3. பொ-ரை: அரும்புபோலும், மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே, தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பையும், வில்லையும் உடைய இறைவனது இடமாகும்.

கு-ரை: திருமாலே அம்பும், மேருமலையே வில்லும் ஆதலின், அவைகளை உடைமையைச் சிறந்தெடுத்து அருளிச்செய்தார். "பதி" என்றது, 'இடம்' என்னும் பொருளதாய் நின்றது. "முகமே" என்ற பிரிநிலை ஏகாரம், 'மெய்ம்மைத் தாமரை மலர் மிகையாகும்' என்னும் பொருளைத் தந்தது. மேலைத் திருப்பாடலில், "நீர்த்திளைக்கும்" என்ற குறிப்பால், இங்கு, "முகிழ்மென் முலையார்" என்றதும் அவரையே என்க. "கமலம் திகழும்" என்றது, வினையுவமம்.

4. பொ-ரை: தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை, நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலே, வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை, தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும்.