பக்கம் எண் :

325
 

மறைசையந்தாதி : இது யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பெற்றது. புலவர் பெருமக்கள் பெரிதும் பாராட்டும் நூல்கள் இவை.

கல்வெட்டு :

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களின் மதுரை கொண்ட கோப்பரசேவரிவர்மன், முதலாம் இராஜராஜ மன்னன், மூன்றாங் குலோத்துங்கசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சர்க்கரவர்த்தி இராஜராஜதேவன், இவர்களின் காலங்களிலும், விஜயநகர அரசர்களில் வீரப்பிரதாப மகாராயர், தேவராய மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கலவெட்டுக்கள் இருக்கின்றன. இவ்வூர் (மறைக்காடு) உம்பள நாட்டுக் குன்றூர் நாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இராஜகேசரி வர்மனாகிய திரிபுவனச் சர்ககரவர்த்தி குலோத்துங்கசோழன் கல்வெட்டு, திருப்பதியம் பாடுவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இராஜேந்திரசோழன் கல்வெட்டு, விக்கிரமன் சந்தியையும் ஏனைய கல்வெட்டுக்கள் விளக்கினுக்கு, ஆடு ஈழக்காசு இவைகள் கொடுக்கப்பட்டதையும் புலப்படுத்துகின்றன. மராத்திமொழியில் உள்ள கல்வெட்டு பிரதாபசிங் மகாராசர், துளஜாமகாராசர் என்போரைப்பற்றிக் கூறுகின்றன. 1

71. திருமுதுகுன்றம்

சிவபெருமானால் முதலில் படைக்கப்பெற்றது ஆதலின் இப்பெயர் எய்திற்று. இது விருத்தாசலம், என்றும் வழங்கப்பெறும்.

இது விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி தொடர் வண்டிக் குறுக்கு வழியில் விருத்தாசலம தொடர்வண்டி நிலையத்திற்குச் சுமார் 1 . 5 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் விருத்தாசலம் செல்லப் பேருந்துகள் உள்ளன. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

இறைவர் : பழமலைநாதர். இறைவி : பெரியநாயகி.


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1924, No. 415 - 503