பக்கம் எண் :

481
 
54. படைக ளேந்திப் பாரி டம்மும்

பாதம் போற்ற மாதும் நீரும்

உடையோர் கோவ ணத்த ராகி

உண்மை சொல்லீர் உம்மை யன்றே

சடைகள் தாழக் கரண மிட்டுத்

தன்மை பேசி இல்ப லிக்கு

விடைய தேறித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

3


55.பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்

பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்

கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்

கருது வார்கள் காணும் வண்ணம்

 

புகழாகுமோ' என்றபடி. 'நீர் செய்வன அனைத்தும், புகழ் முதலியவற்றை விரும்பியன்றி, தெறல்வழியானும், அளிவழியானும் பிறர்க்கு நலஞ்செய்தற் பொருட்டேயாம்' என்பது குறிப்பு.

3. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க. உம் தேவியுடனே. உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு, சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர், இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி, அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என்? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர்.

கு-ரை: "அன்றே" என்றது அசைநிலை. 'உம்மை உண்மை சொல்லீர்' என்றதனை, 'நூலைப் பொருள் அறிவித்தான்' என்பது போலக் கொள்க. 'உண்மை சொல்லீர் உண்மை யன்றே' என்பதும் பாடம். நடனமாடிக் களித்துப் பொழுது போக்குதல் செல்வமுடையார் செயல் என்க. "இட்டு" என்றதன்பின், வினைமாற்றுப் பொருள் தரும், 'பின்' என்பது வருவிக்க.

4. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், விண்ணுலகத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும், இம் மண்ணுலகத்தில் பண்களாகியும், அவற்றை