பக்கம் எண் :

541
 
136.உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்

உள்ளமே அமையுமென் றிருந்தேன்

செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற

செஞ்சடை நஞ்சடை கண்டர்

அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்

தடிகள்தாம் யாதுசொன் னாலும்

பெற்றபோதுகந்து பெறாவிடி லிகழில்

இவரலா தில்லையோ பிரானார். 

3



கு-ரை: ‘இறை‘ இரண்டனுள், முன்னது காலம் உணர்த்தி, மேலே, ‘கருதி’ என்றதனோடு இயைந்தது.

காட்டாய் என்பது பாடம் ஆகாமை அறிக.

3. பொ-ரை: யான், ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது, அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன்; அதனால், என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன், இத்தன்மையேனிடத்து, தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும், நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும், சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும், ‘களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர்’ எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், அடியேன் யாது சொல்லி இரந்தாலும், தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து, பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: ‘உறுதி’ என்றது, என்றும் மாறாத இயற்கையை. ‘உள்ளம்’ என்றது, ‘மனம்’ என்னும் பொருளதாய், அதனால் வரும் பொது உணர்வைக் குறித்தது. புரம் எரியெழச் செய்தமை முதலியன உடம்பொடு புணர்த்தனவாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது.

‘உற்றபோதல்லால் உறுதியை யுணரேன்; உள்ளமே யமையு மென்றிருந்தேன்’ என்றது, தம் எளிமையை விளக்கி யருளியவாறு. ‘சொன்னாலும்’ என்ற குறிப்பினால், பெறுதல், பெறாமைகள், உள்ளத்து உவகையைப் பற்றியவாயின.