பக்கம் எண் :

618
 
232.சுரும்பார் விண்டமல ரவை

தூவித் தூங்குகண்ணீர்

அரும்பா நிற்குமனத் தடி

யாரொடும் அன்புசெய்வன்

விரும்பேன் உன்னையல்லால் ஒரு

தெய்வம் என்மனத்தால

கரும்பா ருங்கழனிக் கழிப்

பாலை மேயானே.

4



கண்டத்தில் நிறுத்தினாய்; அதனால், அவ்விடம் கரிதாயினாய்; இவை உன் அருட்செயல்கள்.

கு-ரை: ஒறுத்தது, நில உலகிற் பிறப்பித்தது, பொறுத்தது, வன்மை பேசியது முதலியவற்றை. 'இரண்டும் அருளினாலே' என்றற்கு, அதனை இடைநிலையாக வைத்து அருளினார். என்மாட்டுச் செய்த செயல்களும் தேவர்கள் பொருட்டுச் செய்ததுபோல்வதே என்பார், நஞ்சுண்டமையை உடன் அருளிச் செய்தார்.

"பிழைத்தனகள்" என்பதில் "கள்", ஒருபொருட் பன்மொழியாய் வந்த விகுதி மேல் விகுதி; இஃது அஃறிணைக்கண் வகர ஐகார ஈற்றின்பின் வருதல் பெரும்பான்மை.

4. பொ-ரை: கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற, அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி, பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன்; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்; இஃது என் உணர்விருந்தவாறு.

கு-ரை: 'சுரும்பு ஆர் மலர்', 'விண்ட மலர்' எனத் தனித்தனி இயைக்க. "சுரும்பு ஆர்" என்பதனை, 'சுரும்பு ஆர்க்க' என்றாக்கி, 'வண்டுகள் ஒலிக்க மலர்கின்ற' என்று உரைத்தலுமாம்.

"விண்ட" என்பது, 'விள்ளுந் தன்மை பெற்ற' எனப் பொருள் தந்தது. "அரும்பாநிற்கும்" என்னும் பெயரெச்சம், "மனம்" என்னும் காரணப் பெயர் கொண்டது.