| கலைசேர் கையினனே திருக் | | கற்குடி மன்னிநின்ற | | அலைசேர் செஞ்சடையாய் அடி | | யேனையும் அஞ்சலென்னே. | | 3 |
272 | செய்யார் மேனியனே திரு | | நீல மிடற்றினனே | | மையார் கண்ணிபங்கா மத | | யானை யுரித்தவனே | | கையார் சூலத்தினாய் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | ஐயா எம்பெருமான் அடி | | யேனையும் அஞ்சலென்னே. | | 4 |
அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். கு-ரை: இத்தலத்தில் இறைவன் மலையின்மேல் கோயில் கொண்டிருத்தலின், "மலைமேல் மாமருந்தே" என்று அருளிச் செய்தார். மலைமேல் உள்ள மருந்து, கிடைத்தற்கரிய மருந்தாதல் அறிக. அலை, ஆகுபெயர். 4. பொ-ரை: செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள். கு-ரை: 'செம்மை' என்பது, எழுவாயிடத்தும் எதுகை நோக்கி விகாரமாயிற்று. 'செய்ய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்றாகக் கொண்டு, 'செய்ய' அழகு நிறைந்த மேனியனே' என்று உரைத்தலுமாம். 5. பொ-ரை: அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே,
|