பக்கம் எண் :

748
 
392.என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்

எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்

வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்

வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன

அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்

பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை

என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

10

திருச்சிற்றம்பலம்


கூறினான்' என்றாற் போல நின்றது. 'பேயுருவம்' என்பது பாடமாயின், 'பேயினது உருவம் போலும் உருவம்' என்று உரைக்க. ''மலை மேல் உற இருந்தான்'' என்றது, ஒருபெயர்த் தன்மைத்தாய், ''ஊன்றும்'' என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று.

10. பொ-ரை: எலும்பையே அணிகலங்களாக அணிபனும், விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும், இசைஞானிக்கு மகனும், வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த, வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும், வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால், மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும், யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், எனக்குரிய பொன்போன்றவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன்போலும்;் என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்!

கு-ரை: இதனையும் ஏனைய திருப்பாடல்களோடு ஒப்பவே அருளிச் செய்தாராயினும், தம் பெயரை எடுத்தோதி, தாம் மதியாது சொன்னவற்றிற்கு இறைவன் வெகுளாது உவந்தான் என்பதனை வைத்த குறிப்பால், மதியாது சொன்னதற்கு இரங்கி அருளிச்செய்த இத்திருப்பதிகத்தைப் பாடுவாரையும் அப்பெருமான் உவந்து அருள் செய்வான் என்று அருளினாராயிற்று. ''சொன்ன'' என்ற பெயரெச்சம், ''அன்பன்'' என்ற செயப்படுபொருட்பெயர் கொண்டது. மதியாது சொல்லுஞ் சொல்லைச் சொல்விக்கவந்து, சொல்வித்து மகிழ்ந்தானாகலின், ''அன்பன்'' என்றார்.