பக்கம் எண் :

79
 

குயில், மயில், நாரை ஆகியவற்றையும் சிவத்துடன் இணைந்த சக்தியாகவே கண்டு இன்புற்றார். பரஞ்சோதி முனிவர் மரத்தில் மறைந்துள்ள மறைப் பொருளை,

செங்கதிர் மேனி யான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம்
மங்குலூர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கட்
புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை
அங்கதி ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா.

-திருவிளையா. புரா. தருமிப். 12

என்று வெளிப்படுத்துவார்.

சோறு சிறக்கும் சோணாட்டில் சேறு நிறைந்த வயல்களின் காட்சியே கண்களுக்குத் தனி விருந்தளிக்கும். முற்றிய செந்நெல்லின் குவை மாமேருவைப் போன்றிருக்கும் என்கிறார் சிவஞான சுவாமிகள். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக நெல் அளக்கும் குண்டையூர்க் கிழாரைப் போல உழவர்களெல்லாம் மனமகிழ்வோடு வேலையைத் தொடங்கிச் செய்வர் என்கிறார் காஞ்சிப் புராணத்தில்.

நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்

அமைந்துவட நாகஞ் சூழ்பொன்

நாவலோ எனவியப்ப வளர்செந்நெல்

அரிபருவ நாடித் தெண்ணீர்

நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்

குண்டைநகர் உழவர் போல்வார்

நாவலோ எனவிளைப்பத் தொழுவரெலாம்

நயந்தெய்தி வினையின் மூள்வார்

-காஞ்சி. நாட்டு. 101

1தாமரைத் தவிசு:

"வான் பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலையகடற்காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்"

என்று கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாராட்டப்பெற்ற


1 கட்டுரையாக 'ஞானசம்பந்தத்தில்' வெளிவந்தது.