| 454. | கரிய மனச்சமண் காடி | | யாடு கழுக்களால் | | எரிய வசவுணுந் தன்மை | | யோஇம வான்மகள் | | பெரிய மனந்தடு மாற | | வேண்டிப்பெம் மான்மதக் | | கரியின் உரியல்ல தில்லை | | யோஎம் பிரானுக்கே. | | 9 |
| 455. | காய்சின மால்விடை மாணிக் | | கத்தெங் கறைக்கண்டத் | | தீசனை ஊரன் எட்டோ | | டிரண்டு விரும்பிய |
அறிவார்! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ! கு-ரை: 'இவனை அணுகுவார் யார்' என்றபடி. ஆதி - அடி. 'முடியும்' என்பது எஞ்சி நின்றது. ''இனி'' என்றது, 'மற்று' என்னும் பொருள்பட நின்றது. 9. பொ-ரை: எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய, கஞ்சியைக் குடிக்கின்ற, கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால், மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி, அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ! கு-ரை: ''எரிய'' என்னும் எச்சம், காரணப்பொருட்டு. 'வசையுணும்' என்பது, 'வசவுணும்' என மருவிற்று; 'வசையுணும்' என்பதே பாடம் எனினுமாம். 'தன்மையோ' என்பதன் முன், மற்றொரு, 'தன்மை' என்பது வருவிக்க. 'வசவுணல்' எனப் பாடம் ஓதினுமாம். பெரிய மனம், அருள் மிகுந்த மனம். 10. பொ-ரை: அடியவர்களே, காய்கின்ற சினத்தையுடைய, பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும், கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய
|