பக்கம் எண் :

997
 
682.

பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்

பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்

தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்

செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்

என்றல், இசையொடு கூடிநிற்றல் பற்றியேயாம். இவற்றை ஓதுவார்க்கும், கேட்பார்க்கும் இசையால் அன்பு தோன்றுதலும், ஞானத்தால் அது நிலைபெறுதலும் உளவாதல் அறியற்பாற்று. இதுபற்றியே, திருப்பதிகங்கட்குத் திருக்கடைக் காப்பாகப் பயன் அருளிச் செய்யப் பட்டதென்பதும், நுனித்துணரற் பாலது.

இனிச் சுவாமிகள் தமது பாடலையும் அவ்விருவர் பாடல்களோடு ஒப்ப இறைவன் மிக விரும்புதலை வெளிப்பட அருள நினைந்திலராயினும், முன்னைத் திருப்பாடலில். "மாத்தெனக்கு வைத்தானை" என அருளினமையாலும், இத் திருப்பாடலிலும் இறைவன் தம்மைக் குற்றம் அறுத்துக் குணஞ் செய்தமையை வகுத்தோதினாராகலானும், பிறவாற்றானும் அதனைக் குறிப்பான் உணர்த்தியருளினார் எனவே கொள்க. அது திருக்குறிப்பு அன்றாயின், தம் திருப்பதிகங்களது இறுதியில், சுவாமிகள் திருக்கடைக்காப்பு அருளுவாரல்லர் என்க.

இவ்வாறு இத்திருப்பதிகத்துள், ஞானசம்பந்தா, நாவுக்கரசரது திருப்பாடல்களின் பெருமையை உலகறிய எடுத்தோதியருளினமையின், சேக்கிழார்,

"நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டுதந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந் தேத்தி அருள்பெற்று"

(தி. 12 ஏ. கோ. புரா. 44)

என எடுத்தோதி, தம் கடப்பாட்டினை இனிது முற்றுவித்தருளினார் என்க.

"வானவர் வணங்க நின்றானை" என்றதனை ஒருபெயர்ப் படுத்து. "வல்லியல்" என்றதனோடு தொக்க தொகையாக்குக.

6. பொ-ரை: யான், முன் உள்ள பாடல்களை, அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன்; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும்