பக்கம் எண் :

திருமுறை]1. கோயில்7


ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
   அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
   தொண்டனேன் இசையுமா றிசையே.             (6)
 

7.

தனதன்நற் றோழா ! சங்கரா ! சூல
   பாணியே ! தாணுவே ! சிவனே !
கனகநற் றூணே ! கற்பகக் கொழுந்தே !
   கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே ! குமர விநாயக சனக !
   அம்பலத் தமரர்சே கரனே !
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
   தொண்டனேன் நுகருமா நுகரே.                (7)
 

வேறு     அணி புவனபோகம்- வேறுபட்ட  நிரையாகிய உலகங்களில்
உள்ள நுகர்ச்சிகள். ‘‘யோகம்’’ என்றது. ‘முத்தி’  என்னும் பொருட்டாய்,
அந்நிலையில்    விளையும்    இன்பத்தைக்     குறித்தது;   எனவே,
இவ்விரண்டாலும்,    இறைவன்    பந்தமும்,   வீடுமாய்   நிற்றலைக்
குறித்தவாறாதல்  அறிக. அற்புதம்-வியப்பு; புதுமை.  ‘அம் பொன்னால்
செய்த’  என  மூன்றாவது  விரிக்க; ‘‘தூயசெம் பொன்னினால்-எழுதி
மேய்ந்த    சிற்றம்பலம்’’    என்று   அப்பரும்   அருளிச்செய்தார்.
இசைதல்-கூடுதல்.

7, தனதன்-குபேரன்.தாணு-நிலைபெற்றிருப்பவன்.‘‘கனகநற்றூணே’’
என்றதை,   ‘‘மாசொன்றில்லாப்-பொற்றூண்காண்’’ (திருமுறை-6,8,1)
என்றதனோடு   வைத்துக்  காண்க.  கொழுந்து-தளிர்;  இஃது  அழகு
மிக்கதாய்  இன்பம்  தருவது கண்கள்-கணுக்களைக்  குறித்த சிலேடை.
அனகன்-பாவம்    இல்லாதவன்;    என்றது.   ‘வினைத்   தொடக்கு
இல்லாதவன்’  என்றதாம். குமரன்-முருகன், ‘குமர  விநாயகர்’ என்னும்
உயர்திணை   உம்மைத்   தொகை   ஒருசொல்லாய்ப்பின்,  ‘‘சனகன்’’
என்பதனோடு,  நான்காவதன் தொகைபடத் தொக்கது.  சனகன் தந்தை.
அமரர்  சேகரன்-தேவர்  கூட்டத்திற்கு  மகுடம்போல  விளங்குபவன்.
இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, ‘அம்பலத்து’  என்றதனோடு தொகைச்
சொல்லாயிற்று.  ‘அமரசேகரன்’  எனவும் பாடம் ஓதுப. ‘நின்’ என்பது,
திருமுறைகளில்,  ‘நுன்’  என  வருதலை  அறிந்துகொள்க.  ‘‘நுகருமா
நுகரே’’ என்றது.