எனவும் பாடம் ஓதுப. ‘‘தொண்டனேன்’’ என்பதன்பின், ‘‘ஆகலின்’’ என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ‘‘பொறுப்பர்’ என்பதனோடு முடிக்க. ‘புலியூராகிய தில்லை’ என்க. சேமம்- காவல். வட்டம்-எல்லை. கொண்டு-நினதாகக் கொண்டு. ஆண்ட-அதனை ஆளுதல் செய்த. ‘பூவடி, மலரடி’ எனத் தனித்தனி இயைக்க. பூ-பொலிவு. புராணம்-பழைமை. பூதங்கள் என்பது சிவகணங்கள் என்னும் பொருட்டாய் உயர் திணையாய் நின்றது.
வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி கையமரு நிலைபோற்றி கருணைமுக மலர்போற்றி மெய்யிலகு மொளிபோற்றி விரவியெனை யெடுத்தாண்ட செய்யதிரு வடிபோற்றி திருச்சிற்றம் பலம்போற்றி. 4 மன்றின்மணி விளக்கெனலா மருவுமுக நகைபோற்றி யொன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர் சென்றுதொழ வருள் சுரக்குஞ் சிவகாம சுந்தரித னின்றதிரு நிலைபோற்றி நிலவுதிரு வடிபோற்றி. 5 தன்னோங்கு மலரடியுந் தளிரோங்கு சாகைகளு மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய் மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற் பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர்கற் பகம்போற்றி. 6 தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட் டயமூட்டிப் போராட்டிப் புறங்காட்டிப் போங்காட்டிற் புலால்கமழு நீராட்டிச் சூர்மாட்டி நிகழ்நாட்டிற் புகழ்நாட்டும் பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல்போற்றி. 7 -கோயிற் புராணம். |