விளியேற்று, ‘சுரவா’ என நின்றது. சரன்-தேவன் ‘‘குரவன்’’ என்றது. ‘தந்தை, தாய், அரசன், ஆசிரியன்’ என்னும் அனைத்துப் பொருளையும் குறிக்கும். 32. ‘திருநீறு இடா உருத் தீண்டேன்’ என்றல், தில்லைக் கூத்தப்பெருமானுக்கு ஆகாதது. தனக்கும் ஆகாமை பற்றியாம். ‘மெய்யிலும் திருமுண்டத்திலும் தீட்டி’ என்க. முண்டம் -நெற்றி. பூசுதல் வாளா பூசுதலும், தீட்டுதல் குழைத்து இடுதலும் ஆகும். மெய்த்திரு முண்டத் திட்டு’ எனவும் பாடம் ஓதுப. திறம் -புகழ். பிதற்றுதல்-பித்துக்கொண்டு பேசுதல். இங்கும் மகேந்திரமலை, ‘பொன்மலை’ எனப்பட்டது. ‘‘அருளும்’’ என்றது, ஆகமங்களை அருளிச்செய்தமையை. எனவே, இவளும் அதுநோக்கியே காதல்மிக்காளாயினமை பெறப்பட்டது. 33. உற்றாய்-யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. ‘உணர்வுள் கலக்கப்பெற்றுப் பொருந்திய ஐந்தெழுத்தும்’ என்க. ‘‘உணர்வுள்’’ என்பது முதலாக, ‘‘பெற்றேன்’’ என்பது ஈறாக உள்ளவை. தலைவியின் கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியன. ‘உணர்வுகள்’ என்பது பாடம் அன்று. சுற்று ஆயசோதி- சுற்றிலும் வீசுகின்ற ஒளியையுடைய. ‘‘மகேந்திரம்’’ என்றது. இகரம் அலகுபெறாது நிற்க ஆரியம் போல நின்றது. ‘சூழ’ என்னும் செயவெனெச்சம், தொழிற் |